Sunday 19th of May 2024 09:27:16 AM GMT

LANGUAGE - TAMIL
.
அருகிவரும் ஃபெர்ரெட் விலங்கை குளோனிங் முறையில் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!

அருகிவரும் ஃபெர்ரெட் விலங்கை குளோனிங் முறையில் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!


அருகி வரும் ஃபெர்ரெட் என்ற விலங்கை குளோனிங் முறையின் மூலம் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவில் அருகிவரும் விலங்கினங்களை குளோனிங் மூலம் உருவாக்குவது இதுவே முதல் முறை.

1988-ஆம் ஆண்டு முதல் உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஃபெர்ரெட்டை ஒத்திருக்கும் விலங்கின் மரபணுக்களை கொண்டே புதிய ஃபெர்ரெட் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 10-ஆம் திகதி ஃபெர்ரெட் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.

அதற்கு எலிசபெத் ஆன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவைத் துறை அறிவித்துள்ளது.

அருகி வரும் ஃபெர்ரெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த குளோனிங் முறை உதவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வில்லா என பெயர் சூட்டப்பட்ட விலங்கில் இருந்த மரபணுவை வைத்தே எலிசபெத் ஆன் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.

வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட அருகிவரும் உயிரினத்தை குளோனிங் மூலம் உலுவாக்கியது இதுவே முதல் முறை. கருப்பு கால்களைக் கொண்ட ஃபெர்ரெட்டுகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி நல்ல பலன் கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது என அமெரிக்க மீன் மற்றும் வன விலங்கு சேவைத் துறையின் ப்ரேரி பிராந்தியத்தின் இயக்குநர் நூரின் வால்ஷ் கூறியுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE